Posts

Showing posts from July, 2022

சிக்களூர் கிராமத்தில் கிடப்பில் போட்ட சாலையை மீண்டும் அமைப்பார்களா வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு...!

Image
  தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பெரியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிக்களூர் கிராமத்திலிருந்து புதுக்காடு வரை இடையே உள்ள 3 கிலோமீட்டர் தூரம் தார் சாலை அமைக்க கடந்த 2018-19 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது செம்மண் மற்றும் ஜல்லி கற்கள் கொண்டு சாலையை சமமாக்கி உள்ளனர். பின்னர் கொரோனா காலகட்டங்கள் தொடங்கிய நிலையில் இரண்டு ஆண்டுகள் இந்தப் பணியை கிடப்பில் போட்டு விட்டனர். கொரோனா காலகட்டங்கள் முடிந்து பின்பும் இந்த தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கப்படவில்லை இதனால் செம்மண் மற்றும் ஜல்லி கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட சாலை ஜல்லி கற்கள் பெயர்த்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது  இந்த சாலை வழியாக தான் சிக்களூர் அரசினர் உயர் நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும், சுற்றியுள்ள பகுதியில்  குடியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் ஆகியவை இந்த சாலை வழியாக தான் கடந்து செல்ல வேண்டும்   தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால் இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது விபத்து ஏற்படும் வாய்...

அரூர் தொகுதிக்குட்பட்ட போளையம்பள்ளி ஊராட்சியில் புதியதாக தார் சாலை மதிப்பீட்டில் ரூ.17,50,000இலட்சம்அமைக்கும் பணியினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், பூமி பூஜை செய்தார்

Image
 அரூர் தொகுதிக்குட்பட்ட போளையம்பள்ளி ஊராட்சியில் புதியதாக தார் சாலை மதிப்பீட்டில் ரூ.17,50,000இலட்சம்அமைக்கும் பணியினை அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார், பூமி பூஜை செய்தார்.  உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், கடத்தூர் ஒன்றிய செயலாளர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் கம்பைநல்லூர் நகர கழக செயலாளர் தனபால், ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதி சென்னையன்,வினோதா ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய இணைச் செயலாளர் நேதாஜி, கிளை கழக செயலாளர்கள் தேசிங்கு, குப்புசாமி, பாலு,பன்னீர், முன்னாள் கிளை கழக செயலாளர் ஆண்டி,ராஜி, ஒப்பந்ததாரர் முருகன் மற்றும் கழக உடன்பிறப்புகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.