Posts

Showing posts from August, 2022

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை...!

Image
 புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தடை...! தென்காசியில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்  அலுவலக கட்டிட பணிகளை தொடர உயர்நீதிமன்றம் தடை, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் கட்டப்படுவதால்  கட்டிடம் கட்டுவதற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உள்ளது இதனால்சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற்ற பின்பு தான் கட்டுமானத்தை தொடர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

தீ தடுப்பு மற்றும் முதலுதவி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்...!

Image
  தீ தடுப்பு மற்றும் முதலுதவி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்...! தருமபுரியில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி , பையர்நத்தம் K.K. 80வாசிக்கவுண்டனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு   கடன் சங்கம் ,   B. பள்ளி்பட்டி , Dr. முனிரத்னம் பியூல்ஸ் , சேலம் மெயின் ரோடு , பொம்மிடி. தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி , கடத்தூர் கிளை , பொம்மிடி மெயின் ரோடு , பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் இணை இயக்குனர் மேற்கு மண்டலம் அவர்களது உத்தரவின்படியும் , தருமபுரி மாவட்ட அலுவலர் அவர்களது அறிவுரையின்படியும் , தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில் கொரோனா பரவல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை   விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு குறித்து ஊழியர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.  தீயை அணைக்கும் முறைகள், தீயின் வகைகள் , முதலுதவி , தீ அணைப்பான் பயன் முறைகள் , நீரில் மூழ்கியவரை காப்பாற்றும் முறை , இடி , மின்னல் சமயங்களில் எப்படி காப்பாற்றிக்கொள்வது , கேஸ் சிலிண்டர் தீ விபத்து , மின் தீ விபத்துகள் , மற்றும் எவ்வாறு தீயை தடுப்பது ...

இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்

Image
   வேலூர்...இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்...! வேலூர் மாவட்டம் வேலூர் சைதாப்பேட்டை ஆர் கே மாதா கோவில் அருகில் மதரஸாயே, தாரூல் ஹஸனாத்தில் விங்ஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் வேலூர் sih.r.& lc கரிகிரி மருத்துவமனை மற்றும் நண்பர்கள் டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் தலைவர் முஹமத் ரபி தலைமையில் ஜம்ஷீத் பாஷா வரவேற்புரையில் முஹம்மத் இஸ்மாயில், முஹம்மது வசிம், இலியாஸ், அசீமூத்தின், முஹமத் ஜபார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் குழந்தைகள் நலம், பெண்கள் நலம், கற்பிணி பெண்கள் நலம், முதியோர் நலம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆஸ்துமா மற்றும் இதர நோய்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது சர்க்கரை ரத்தக் கொதிப்பினால் வரும் நிரந்தரமான விழித்திரை பாதிப்பின் பரிசோதனை, கண் பார்வை நரம்பு பரிசோதனை, கண் பார்வை பரிசோதனை, கண்புரை கண்டறியதில் மற்றும் பொதுமக்களுக்கான தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது     இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் நண்பர்கள் டிரஸ்ட் உ...