Posts

Showing posts from September, 2022

கோவை வேளாண் பல்கலைக்கழக செயல்பாடுகளை கண்காணித்திட பி ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

Image
  வேளாண்  உணவுப் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்ய 10 ஆயிரம் கோடியில் தேவையான நிதியை தமிழகம் பெற வேண்டும். கோவை வேளாண் பல்கலைக்கழக செயல்பாடுகளை கண்காணித்திட பி ஆர்.பாண்டியன் வேண்டுகோள். தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு விஞ்ஞானிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அதன் இயக்குனர் பொறுப்பு லோகநாதன், பேராசிரியர் மீனாட்சி உள்ளிட்டோர் நிறுவனத்தின் நோக்கம் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து அதனை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகள் லாபம் பெறும் தொழிலாக மாற்றும் செய்ய மத்திய அரசு ரூபாய் 10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.  இந்நிதி மூலம் உற்பத்தியாளர் குழுக்களை சிறு குறுந் தொழில் நிறுவனங்களாக மாற்றம் செய்து அதன் அடிப்படை கட்டம...

தருமபுரியில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் உயிர் இழப்பு

Image
 தருமபுரி சந்தைப்பேட்டை பகுதியில் குடியிருந்த வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு வீட்டு உபயோகப் பொருட்களை மூன்றாவது மாடியில் இருந்து கீழே  இறக்கும்பொழுது மின்சாரம் கம்பி மீது உரசியதால் இலியாஸ் பாஷா, கோபி ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர்.  பச்சையப்பன் என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது உயிரிழந்துள்ளார்.மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  தருமபுரி சந்தைப்பேட்டையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு..!

Image
 விநாயகர் சதுர்த்தி விழாவை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஏராளமான பக்தர்கள் விநாயகர் சிலையை இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் மற்றும் லாரி, மினி லாரிகளின் மூலம் கொண்டு சென்று தருமபுரி மாவட்ட இருமத்தூர் - தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வைத்து பூஜை செய்து பின்பு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் எல்லை கயிறு அமைக்கப்பட்ட கயிற்றுக்குள்ளே விநாயகர் சிலையை நீரில் கரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும், பாதுகாப்பாக குளிக்கவும் என்று காவல்துறையினர் எச்சரித்தனர்.  இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று பக்தர்களும், பொதுமக்களும் விநாயகர் சிலையை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்புடன் ஆற்றில் சிலையை கரைத்து விட்டு பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியாக சென்ற...

விநாயகர் சிலையை நான்கு இடங்களில் கரைப்பதற்கு அனுமதி..!

Image
 விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட நான்கு இடங்களில் கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே வந்ததாலும், பாதுகாப்பு கருதியும் விநாயகர் சிலைகளை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்துகொண்டே வருவதால் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் விநாயகர் சிலை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும், தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஒகேனக்கல் உட்பட தெண்பெண்ணையாறு (இருமத்தூர்), நாகாவதி அணை, தொப்பையாறு அணை ஆகிய நான்கு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் செய்தி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.