Posts

Showing posts from August, 2025

குமாரசாமி பேட்டையில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பொதுமக்கள் விண்ணப்பங்கள் பதிவு..!

Image
 குமாரசாமி பேட்டையில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பொதுமக்கள் விண்ணப்பங்கள் பதிவு..!   தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் நகரில் உள்ள 8,9,10 ஆகிய வார்டுகளுக்கு "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகளிர் உரிமை திட்டத்திற்கு ஏராளமான பெண்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.  மேலும் இ சேவை மையத்தின் சார்பில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பட்டா விண்ணப்பித்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண்பதற்காக மனுக்களை பொதுமக்கள் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் பி.பி, சர்க்கரை நோய், ரத்தம் போன்ற உடலில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என பரிசோதனை செய்து கொண்டனர்.  இம்முகாமில் ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எ.மாதேஸ்வரன் முகாமினை பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். இந்த முகாமில் நகர மன்ற தலைவர் லட்சுமி, ஆணையர் சேகர், டி.எ.குமார், சூர்யா, ரவி, சாந்தி ரூபி மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இலக்கியம்பட்டி ஓம் சக்தி மன்றத்தின் சார்பில் 23- ஆம் ஆண்டு கூழ் ஊற்றும் விழா..!

Image
இலக்கியம்பட்டி ஓம் சக்தி மன்றத்தின் சார்பில் 23- ஆம் ஆண்டு கூழ் ஊற்றும் விழா..! தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ சாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இலக்கியம்பட்டி ஓம் சக்தி மன்றத்தின் சார்பில் 23- ஆம் ஆண்டு கூழ் ஊற்றும் விழா பாரதிபுரம் ஸ்ரீ விநாயகர் திருக்கோவிலில் இருந்து பொதுமக்கள் பூ கரகம், கூழ் எடுத்துக்கொண்டு  ஊர்வலமாக ஜெகநாதன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கீழ் மாரியம்மன் கோவில் தெரு, ஸ்கூல் தெரு ஆகிய பகுதியில் இருந்து  பக்தர்கள்  வந்து ஸ்ரீ சாலை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கூழ் ஊற்றுதல் விழா நடைபெற்றது. இதில் இலக்கியம்பட்டி ஓம் சக்தி மன்றம் , இலக்கியம்பட்டி  இளைஞர்கள்  பொதுமக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.