தருமபுரி மேற்கு நகர கழக சார்பில் ஆலோசனைக் கூட்டம்..!
தருமபுரி மேற்கு நகர கழக சார்பில் ஆலோசனைக் கூட்டம்..! தருமபுரி மேற்கு நகர கழக சார்பில் ஆலோசனைக் கூட்டம் மேற்கு நகர பொறுப்பாளர் M.P.கௌதம் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி கிழக்கு நகர கழக பொறுப்பாளர் நாட்டான் மாது முன்னிலை வகித்தார். தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆ.மணி MP, கலந்து கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடப்படுவதை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி, தருமபுரி மேற்கு நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அழகுவேல்,சம்மந்தம் MC, D.G.வடிவேல் , சௌந்தர்ராஜன் MC, பாஸ்கர், வெங்கடாஜலபதி, சாந்தரூபிணி மற்றும்நகரப் பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட ,நகர சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள்,BLA2,BDA,BLC நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஜெகன் MC மேற்கு நகர பொறுப்பு குழு உறுப்பினர் நன்றி கூறினார்.