Posts

Showing posts from July, 2025

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ கருப்புசாமி கோவிலில் 108 கிலோ மிளகாய் கரைசலை பூசாரி மீது ஊற்றி பக்தர்கள் அபிஷேகம்..!

Image
 ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ கருப்புசாமி கோவிலில் 108 கிலோ மிளகாய் கரைசலை பூசாரி மீது ஊற்றி பக்தர்கள் அபிஷேகம்..! தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே நடப்பனஹள்ளி கிராமத்தில் பெரிய கருப்பு சாமி கோயில் உள்ளது, ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளன்று இந்தக் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம், இதைதொடர்ந்து இந்த ஆண்டும் ஆடி அமாவாசை 11 ஆம் ஆண்டை முன்னிட்டு ஸ்ரீ கருப்புசாமி கோயிலில் வினோதமான அபிஷேகங்கள் நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலின் பூசாரியான கோவிந்தன் என்பவர் அருள் வந்து ஆடியபடியே, நீளமான அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்குக் கூறினார். இதையடுத்து பக்தர்கள், கோவிந்தன் மீது 108 கிலோ மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்தனர். அதன் பிறகு அவருக்குப் பால் அபிஷேகமும் செய்தனர். மேலும், மதுபானங்களையும் விதவிதமான சுருட்டுகளையும் வைத்துப் படைத்தனர். அபிஷேகங்கள் முடிந்த பிறகு, பூசாரி கோவிந்தன் பக்தர்களின் குடும்பப் பிரச்சனைகள் அகலவும், தீய சக்திகள் விலகவும், வியாபாரம், கடன் பிரச்சனைகள் தீரவும் அருள்வாக்குக் கூறினார்.  கோயிலில் பக்தர்கள் ஆடு, கோழிகளைப் பலியிட்டு நேர்...

தருமபுரியில் நீருக்கடியில்கடல் மீன் கண்காட்சி தொடக்கம்..!

Image
 தருமபுரியில் நீருக்கடியில்கடல் மீன் கண்காட்சி தொடக்கம்..! தருமபுரி சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வள்ளலார் திடலில் வண்ண மீன்களுடன் கூடிய கடல் மீன் கண்காட்சி மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கண்காட்சி இன்று முதல் தொடங்கியது. இக்கண்காட்சியை நகராட்சி துணைத் தலைவர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் . இதுகுறித்து கண்காட்சி க அமைப்பாளர்கள் டி.ஜே. அம்யூஸ்மெண்ட் மேலாண் இயக்குனர் தினேஷ் மற்றும் மேலாளர் ஆனந்த் ஆகியோர் கூறியதாவது:- இக்கண்காட்சியானது திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இன்று முதல் செப்டம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தத்துரூபமாக கடலுக்கு அடியில் சென்று பல விதமான வண்ண மீன்களை காணலாம். மேலும், பொழுதுபோக்குக் காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ ராட்டினம், கொலம்பஸ் பிரேக் டான்ஸ், டிராகன்டி ரெயின், மினி ட்ரெயின், உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்ட...

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

Image
 கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது; தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கார்த்தன அள்ளி கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கரக செல்லியம்மன் கோவில் நிலம் 33 ஏக்கர் 42 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் இந்த கோவில் அறங்காவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலம் ஏலம் விட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலத்தை பொது ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஏலத்தை சேலம் இணை ஆணையர் பொது ஏலம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஏலம் விடாமல் இந்த கோவில் அறங்காவலர் குழுவினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை மீறி இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த நிலத்தை ஏலம் விடாததால் கரக செல்லியம்மன் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி கோவில் நிலத்தை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்...

ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு இலக்கியம்பட்டி ஶ்ரீ சாலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் திருவீதி உலா நிகழ்ச்சி..!

Image
 ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு இலக்கியம்பட்டி  ஶ்ரீ சாலை  மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் திருவீதி உலா நிகழ்ச்சி..! தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஸ்ரீசாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு சாமிக்கு  தேன், பால், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இலக்கியம்பட்டி,செந்தில் நகர், அழகாபுரி,அண்ணா நகர், கொட்டாய், கலெக்டரேட் ஆகிய பகுதியில் மேளதாளம்  முழங்க சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சாமி திருவீதி உலா வரும்பொழுது வழிநெடுங்க பக்தர்கள் சாமியை வழிபாடு செய்தனர். இதில் ஊர் நிர்வாகிகள் பழனிச்சாமி, சாமிநாதன், காளியப்பன், பழனிச்சாமி, கோவிந்தராஜ், சிவா,தயாநிதி, கௌதம், ராம்குமார், இலக்கியம்பட்டி M வெங்கடேஷ் , அருண்குமார், சந்தோஷ், கோவில் பூசாரி மாது, ஊர் பொதுமக்கள், இலக்கியம்பட்டி இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் தரையில் அமர்ந்து கொண்டு உணவு அருந்திய எம்எல்ஏ..!

Image
 கொமத்தம்பட்டியில் அரசு பள்ளியில் பாகுபாடின்றி மாணவர்கள் மத்தியில் தரையில் அமர்ந்து கொண்டு உணவு அருந்திய எம்எல்ஏ..! தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி கொமத்தம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமாகவும் சுத்தமாகவும் உள்ளதா என ஆய்வு மேற்கண்ட பின்னர் பள்ளி மாணவர்களுடன் அவரும் தரையில் அமர்ந்து கொண்டு உணவு சாப்பிட்டார். அப்பொழுது மாணவர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு உணவு அருந்திய தருமபுரி சட்டமன்ற உறுப்பினரை பார்த்து மாணவர்கள் சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

பாஜகவினர் காமராஜர் பிறந்த நாளை இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்..!

Image
 பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு பாஜக சார்பில்  முன்னாள் முதல்வர்  கர்மவீரர் காமராஜர்  123 -வது பிறந்தநாள் விழா  கொண்டாட்டம்..! தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு பாஜக சார்பில்  முன்னாள் முதல்வர்  கர்மவீரர் காமராஜர்  123 -வது பிறந்தநாள் விழா  மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில்  நடைப்பெற்றது. நகர தலைவர் கணேசன், நகர பொருளாளர் முனியப்பன், பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் சின்னவன், நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர செயலாளர்கள்  நந்தகிரி, ராஜாராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு உள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா மாலை அணிவித்து, மலர்தூவி  மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பாஜகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து பொது மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் அழகுபெருமாள், சண்முகம், மாதேஷ், ராமர்,சரவணன...

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!

Image
 பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமை தாங்கினார். இதில் ஷோரூம் உரிமையாளர் ஜெகதீஷ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தொழிலதிபர்கள் கேசவராஜ், விமல்ராஜ், சக்திதரன், மங்களகணபதி முருகேசன், ராஜாமணிசரவணன், நகை கடைசங்க தலைவர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி புதிய மொபைல் ஷோரூமை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து வணிகர் சங்க தலைவர் முத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், அன்புமணி, தேமுதிக மாவட்ட செயலாளர் விஜய்சங்கர், பாஜக நகர் மண்டல் தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேளாவள்ளி சேகர், கணபதி, சின்னவன், தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன்,  தொழிலதிபர்கள் தண்டாயுதபாணி, சிவாஜி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ...