கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

 கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 



அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது;

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கார்த்தன அள்ளி கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கரக செல்லியம்மன் கோவில் நிலம் 33 ஏக்கர் 42 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் இந்த கோவில் அறங்காவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலம் ஏலம் விட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலத்தை பொது ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஏலத்தை சேலம் இணை ஆணையர் பொது ஏலம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஏலம் விடாமல் இந்த கோவில் அறங்காவலர் குழுவினர் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த நிலத்தை ஏலம் விடாததால் கரக செல்லியம்மன் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி கோவில் நிலத்தை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!