சிக்களூர் கிராமத்தில் கிடப்பில் போட்ட சாலையை மீண்டும் அமைப்பார்களா வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு...!

 தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பெரியப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிக்களூர் கிராமத்திலிருந்து புதுக்காடு வரை இடையே

உள்ள 3 கிலோமீட்டர் தூரம் தார் சாலை அமைக்க கடந்த 2018-19 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது செம்மண் மற்றும் ஜல்லி கற்கள் கொண்டு சாலையை சமமாக்கி உள்ளனர்.


பின்னர் கொரோனா காலகட்டங்கள் தொடங்கிய நிலையில் இரண்டு ஆண்டுகள் இந்தப் பணியை கிடப்பில் போட்டு விட்டனர். கொரோனா காலகட்டங்கள் முடிந்து பின்பும் இந்த தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கப்படவில்லை இதனால் செம்மண் மற்றும் ஜல்லி கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட சாலை ஜல்லி கற்கள் பெயர்த்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது  இந்த சாலை வழியாக தான் சிக்களூர் அரசினர் உயர் நிலை பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும், சுற்றியுள்ள பகுதியில்  குடியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் ஆகியவை இந்த சாலை வழியாக தான் கடந்து செல்ல வேண்டும்

 

தற்போது ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால் இருசக்கர வாகனங்கள் ஓட்டிச் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது மழைக் காலங்களில் செம்மண் கரைந்து சேரும் சகதியமாக மாறுகிறது எனவே இந்த சாலையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்செய்து தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!