இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்
வேலூர்...இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்...!
வேலூர் மாவட்டம் வேலூர் சைதாப்பேட்டை ஆர் கே மாதா கோவில் அருகில் மதரஸாயே, தாரூல் ஹஸனாத்தில் விங்ஸ் வெல்ஃபேர் டிரஸ்ட் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் வேலூர் sih.r.& lc கரிகிரி மருத்துவமனை மற்றும் நண்பர்கள் டிரஸ்ட் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் தலைவர் முஹமத் ரபி தலைமையில் ஜம்ஷீத் பாஷா வரவேற்புரையில் முஹம்மத் இஸ்மாயில், முஹம்மது வசிம், இலியாஸ், அசீமூத்தின், முஹமத் ஜபார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் குழந்தைகள் நலம், பெண்கள் நலம், கற்பிணி பெண்கள் நலம், முதியோர் நலம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ஆஸ்துமா மற்றும் இதர நோய்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது சர்க்கரை ரத்தக் கொதிப்பினால் வரும் நிரந்தரமான விழித்திரை பாதிப்பின் பரிசோதனை, கண் பார்வை நரம்பு பரிசோதனை, கண் பார்வை பரிசோதனை, கண்புரை கண்டறியதில் மற்றும் பொதுமக்களுக்கான தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் நண்பர்கள் டிரஸ்ட் உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


Comments
Post a Comment