கோவை வேளாண் பல்கலைக்கழக செயல்பாடுகளை கண்காணித்திட பி ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
வேளாண் உணவுப் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்ய 10 ஆயிரம் கோடியில் தேவையான நிதியை தமிழகம் பெற வேண்டும்.
கோவை வேளாண் பல்கலைக்கழக செயல்பாடுகளை கண்காணித்திட பி ஆர்.பாண்டியன் வேண்டுகோள்.
தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு விஞ்ஞானிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அதன் இயக்குனர் பொறுப்பு லோகநாதன், பேராசிரியர் மீனாட்சி உள்ளிட்டோர் நிறுவனத்தின் நோக்கம் செயல்பாடுகள்
குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில்
தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றம் செய்து அதனை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விவசாயிகள் லாபம் பெறும் தொழிலாக மாற்றும் செய்ய மத்திய அரசு ரூபாய் 10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிதி மூலம் உற்பத்தியாளர் குழுக்களை சிறு குறுந் தொழில் நிறுவனங்களாக மாற்றம் செய்து அதன் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதனை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மாநில அரசுகளின் கையிலே
உள்ளது.மத்திய மாநில அரசுகள் சிறு குறுந் தொழில் நிறுவனங்கள் மூலம் இதனை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும் அதற்கான ஒருங்கிணைப்பை வெளிப்படைத்த தன்மையோடு உருவாக்கிட தமிழக அரசு முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கர்நாடகம் இந்நிதியை கூடுதலாக பெற்று அம் மாநிலத்தில் இந்தியாவில் முன்மாதிரியாக செயல்படுத்துகிறது.எனவே தமிழக அரசு தேவையான நிதியை கூடுதலாக பெறுவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் வர்த்தகத்துறை மற்றும் அபிடா ஏற்றுமதி முகமை மூலம் சிறப்புடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த தமிழக அரசு சிறப்பு குழுக்களை அமைத்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏற்றுமதி முனையங்களை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.அதற்கு தேவையான குளிர்சாதன கிடங்குகள், ஏற்றுமதி செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைத்து அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்ய தயாராக உள்ளது.இதனை தமிழக அரசு கவனத்துடன் மேற்கொள்வது தமிழக விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
இத்திட்டத்தில்கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந் நிதி முழுமையும் கார்ப்பரேட்டுகள் அரசியல்வாதிகள் தலையீடு இன்றி வேளாண் உற்பத்தி நிறுவனங்களுக்கு சென்றடையுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய மாநில அரசுகளுக்குள் இதற்கான ஒருங்கிணைப்பு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி உற்பத்தியாளர் குழுக்களுக்கு நேரடியாக சென்றடைகிற நடவடிக்கையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும்.
கோவை வேளாண் பல்கலைக்கழகம் உலகப் புகழ்மிக்கது. தற்போதைய செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக தகுதியான வேளாண் விஞ்ஞானிகள் துறை தலைவர்களாக நியமிக்கப்படுவதில் பாகுபாடு காட்டப்படுகிறது. ஒற்றுமை இன்மையால் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்குலைந்துள்ளது.இன்றைய தேவைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் ஆய்வுகள் மேற்கொள்வதில் மிகப்பெரிய பின்னடை ஏற்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி திட்டம் செயல்பாடுகள் குறைந்து வருகிறது. இதன்
துணை ஆராய்ச்சி நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கி உள்ளது. ஒட்டுமொத்த வேளாண் பல்கலைக்கழகத்தின் செயல்பாடு சந்தேகத்திற்கு இடமளிக்கிற வகையில் உள்ளது. இதனை மீட்டெடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வேளாண்மைக்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகள் ஆராய்ச்சிகள் தகுதியான வேளாண் விஞ்ஞானிகளை கொண்டு மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.தகுதி படைத்தவர்களை பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு துறைக்கும் தலைவர்களாக நியமன செய்து செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் சிறப்புகளை அழிவிழிருந்த மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதிகள் வெளிப்படைத் தன்மையோடு அதற்கான திட்டங்களை செயல்படுத்த தேவையான கண்டிப்புடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தன்னாட்சி அதிகாரம் என்கிற பெயரில் வேளாண் பல்கலைக்கழகம் தன் விருப்பத்திற்கு செயல்படுவதையும் அனுமதிக்க கூடாது என வலியுறுத்துகிறோம்.
மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அடிப்படையில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் ஏற்படுத்த உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் தஞ்சை எல்.பழனியப்பன் தஞ்சை மாநகர செயலாளர் அறிவு,தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் காவலூர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



Comments
Post a Comment