விநாயகர் சிலை ஆற்றில் கரைப்பு..!

 விநாயகர் சதுர்த்தி விழாவை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது


இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஏராளமான பக்தர்கள் விநாயகர் சிலையை இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் மற்றும் லாரி, மினி லாரிகளின் மூலம் கொண்டு சென்று தருமபுரி மாவட்ட இருமத்தூர் - தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வைத்து பூஜை செய்து பின்பு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் எல்லை கயிறு அமைக்கப்பட்ட கயிற்றுக்குள்ளே விநாயகர் சிலையை நீரில் கரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும், பாதுகாப்பாக குளிக்கவும் என்று காவல்துறையினர் எச்சரித்தனர்.


 இதைத்தொடர்ந்து அங்கு ஏராளமான விழிப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று பக்தர்களும், பொதுமக்களும் விநாயகர் சிலையை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்புடன் ஆற்றில் சிலையை கரைத்து விட்டு பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியாக சென்றனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!