பேரறிஞர் அண்ணாவின் 116- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்..!

 தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் பேரறிஞர் அண்ணாவின் 116- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு தருமபுரி நகர கழகசெயலாளர் பூ கடை ரவி தலைமை தாங்கினார். 

ஒன்றிய கழகச் செயலாளர் நல்லம்பள்ளி கிழக்கு சிவபிரகாசம் வரவேற்புரை ஆற்றினார். தருமபுரி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நீலாபுரம் செல்வம் , அசோகன், நகர அவைத் தலைவர் வடிவேல், நகர துணை செயலாளர் அறிவாளி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்ட கழக செயலாளர் அன்பழகன், தலைமை கழக பேச்சாளர் காவேரி, கழக அமைப்புச் செயலாளர் சிங்காரம்,  கழக விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நகர மன்ற உறுப்பினர் நாகராஜன் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!