3 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்..!
முத்துப்பேட்டையில் 3 ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம் கோலாகலம் இரண்டாயித்திற்கும் மேற்பட்டோர் பங்கே பங்கேற்பு..!
நாடு முழுவதும் கடந்த 7- ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் இந்து முன்னணி சார்பில் 32 ம் ஆண்டு வெற்றி விநாயகர் ஊர்வலம் இன்று நடைபெற்று வருகிறது இவ்ஊர்வலத்தையொட்டி முத்துப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 6 நாட்களாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதன் நிறைவாக இன்று முத்துப்பேட்டை ஜாம்பவான்னோடை பகுதியில் உள்ள சிவன் கோவிலில் 19 க்கும் மேற்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று ஊர்வலம் நடைபெற்றது ஊர்வலத்தை பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் துவக்கி வைத்தார். விநாயகர் ஊர்வலம் அமைதியாகவும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் இருக்கும் வகையில் திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து 3000 - த்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக திருச்சி ஐஜி கார்த்திகோயன் தலைமையில் நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள்,
ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராவும், மொபைல் வாகனம் மூலம் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையினை கண்காணித்து வருகின்றனர். மேலும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தண்ணீரை பீய்சி அடிக்கும் வஜீராவாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விநாயகர் ஊர்வலம் ஜாம்பாவனோடை பகுதியில் தொடங்கி முத்துப்பேட்டையில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தம்பிக்கோட்டை கீழபாலம் பாமணியாற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
Comments
Post a Comment