புலிகரையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா..!

 தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புலிகரையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா வை முன்னிட்டு பாலக்கோடு தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஒன்றிய தலைவர் கோபி தலைமை தாங்கினார். 

தம்பிதுரை, பூவரசன், ராஜ்குமார் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். சிறப்பு அழைப்பாளராக பாஸ்கர் மாவட்ட தலைவர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கீழ்கண்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்கள். முதல் பரிசு ஐஸ்வரியம் முருகன், இரண்டாம் பரிசு மாவட்ட பொதுச் செயலாளர் சிவசக்தி, மூன்றாம் பரிசு மாவட்ட துணைத் தலைவர் அல்ராஜ், நான்காம் பரிசு பென்னாகரம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவலிங்கம்,  ஐந்தாம் பரிசு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் பாலக்கோடு சிவா ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினார்கள். நன்றி உரை தம்பிதுரை விவசாயி அணி தலைவர், பாலக்கோடு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!