முன்னாள் மாணவர்களின் விரிவுரை தொடர் வகுப்பு..!
தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழகம் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக முன்னாள் மாணவர்களின் விரிவுரை தொடர் வகுப்பு "பொருள் அறிவியலில் நானோ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சி" என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் துறைத் தலைவர் செல்வபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் மோகனசுந்தரம் தலைமை உரை நிகழ்த்தினார். முன்னாள் மாணவர் மணிகண்டன், உதவி பேராசிரியர், இயற்பியல் துறை ராமகிருஷ்ணா கல்லூரி திருச்சிராப்பள்ளி சிறப்பு வகுப்பை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியாக பிரசாத், உதவி பேராசிரியர், இயற்பியல் துறை நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வை கோபால் கிருஷ்ணன், செந்தில் மற்றும் இயற்பியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

Comments
Post a Comment