தருமபுரியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்..!
தருமபுரியில் தனியார் திருமண மண்டபத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் நகரக் கழகச் செயலாளர் நாட்டான் மாது வரவேற்புரை ஆற்றினர்.
மேலும் செல்வராஜ் மாவட்டஅவைத் தலைவர், தங்கமணி மாவட்ட கழகப் பொருளாளர், லட்சுமி நாட்டான் மாது நகர மன்ற தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் இன்ப சேகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் இல்லம் தேடி இளைஞரணி சேர்த்தல் கழக ஆக்கப்பணிகள் குறித்து மாவட்ட கழக செயலாளர் பேசினார். இக்கூட்டத்தில் அன்பழகன், மாநில மாவட்ட நகர பேரூர் ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment