தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்..!
தருமபுரி கிழக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கட்சியின் 20-ம் ஆண்டு தொடக்க விழா, விஜயகாந்த் 72-வது பிறந்தநாள் விழா மற்றும் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கியமைக்கு நன்றி அறிவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பி. குமார் தலைமை தாங்கினார். தருமபுரி நகர செயலாளர் ஜெயம் சுரேஷ் வரவேற்று பேசினார்.
மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்சங்கர், தொழிற்சங்க மாநிலத் துணைத் தலைவர் விஜய்வெங்கடேஷ், மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ராமலிங்கம், தலைமை கழக பேச்சாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். விழாவையொட்டி ஏழைப் பெண்களுக்கு புடவைகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் ஒன்றியம் வாரியாக நிர்வாகிகளுக்கு கொசு மருந்து அடிக்கும் எந்திரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் பெரியசாமி, தங்கதுரை, பொன்மொழி, ஒன்றிய செயலாளர்கள் சரவணன் விஜயகாந்த், ராஜேந்திரன், சேட்ராவ், ரமேஷ், பேரூராட்சி செயலாளர்கள் கார்த்திக், முரளி, மணி, யசேந்திரன் மற்றும் அணி பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் தருமபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ் குமார் நன்றி கூறினார்.

Comments
Post a Comment