பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ..!

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இலளிகம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் அந்தந்த பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்துக்கொண்டு மாணவ,மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வுகளில், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்யா, இலளிகம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இலளிகம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா மாதேஷ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அரங்கநாதன், பாமக மாவட்ட துணை செயலாளர் மனோகரன், மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள், முருகன், புனிதாபழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகம், பாகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், நிர்வாகிகள் செந்தில், மாது, ஜெயக்குமார், வடிவேல், தாமரை, தங்கதுரை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். 



Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!