பாரதிய மஸ்தூர் சங்கம் தொழிற்சங்க கொடியேற்றும் விழா..!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு விஸ்வாகர்மா ஜெயந்தி விழா மற்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி யின் 74 -ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது.
இதற்கு தருமபுரி மண்டல செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். பாலக்கோடு கிளைச் செயலாளர் குப்புசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தருமபுரி மண்டல கௌரவ தலைவர் சண்முகம், தருமபுரி மண்டல தலைவர் சேட்டு, தருமபுரி மண்டல பொருளாளர் பழனிச்சாமி ,தருமபுரி மண்டல துணைச் செயலாளர் செந்தில்குமார், பாலக்கோடு கிளை பொருளாளர் தங்கவேல், பாலக்கோடு கிளை அமைப்பு செயலாளர் வெங்கடாசலபதி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாலக்கோடு கிளைத்தலைவர் மாதையன் நன்றி உரையாற்றினார்.

Comments
Post a Comment