த்தாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஊர்வலம்..!

 தருமபுரியில் சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஊர்வலம்..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவிற்கு தருமபுரியில் இரங்கல் கூட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு , சிசுபாலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தீர்த்தராமன், திமுக நகரசெயலாளர் நாட்டான் மாது, திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமைஜெயராமன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராசன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், பாண்டியன், சாக்கன் சர்மா , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக நிர்வாகி சுப்பிரமணி, இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சுபேதார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் , புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் புகழேந்தி ,மக்கள் நீதி மையம் வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் ஷகிலா உள்ளிட்டோர் இரங்கல் உரைநிகழ்த்தினர். பின்னர் ஒருநிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக செங்கொடிபுரத்தில் துவங்கிய இரங்கல் ஊர்வலம் ராஜகோபால் பூங்கா வழியாக பிஎஸ்என்எல் அலுவலகம் வந்தடைந்தது.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!