உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி..!
தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சி, தர்மபுரி மாவட்ட வன்னியர் சங்க சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார். தருமபுரி மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பசுமைதாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் போது உயிர் இழந்த தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது 21 பேர் தங்களது உயிர்களை இழந்து 108 சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தனர் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின்போது செந்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பாரி மோகன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், பாடி செல்வராஜ், சாந்தமூர்த்தி, பெரியசாமி மாவட்ட அமைப்புச் செயலாளர் சண்முகம், பசுமை தாயகம் மாது, வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Comments
Post a Comment