விநாயகர் சிலையை உற்சாகத்துடன் நீர் நிலைகளில் கரைத்து மகிழ்ந்த பொதுமக்கள்..!
விநாயகர் சிலையை உற்சாகத்துடன் நீர் நிலைகளில் கரைத்து மகிழ்ந்த பொதுமக்கள்..!
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து மூன்று நாட்கள் பொதுமக்கள் சிறப்பாக வழிபட்டு வந்தனர். இதையடுத்து மூன்று நாட்கள் முடிந்த நிலையில் விநாயகர் சிலைகளை நீர் நிலையில் கரைப்பதற்காக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏராளமான விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த நிலையில் விநாயகர் சிலையை பொதுமக்கள் ஒகேனக்கல் காவேரி ஆறு, தென்பெண்ணை ஆறு, கே ஆர் பி அணை என பல்வேறு இடங்களில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்காக மினி டெம்போ, லாரிகள், ஆட்டோக்கள் மூலம் மேல தாளங்களுடன் உற்சாகத்துடன் ஊர்வலமாக விநாயகர் சிலையை எடுத்துக் கொண்டு அந்த அந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றனர். இதைத்தொடர்ந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள திப்பம்பட்டி கூட்டு ரோடு அருகே இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் சிலையை ஏற்றி கொண்டு வரும் வாகனங்களை காவல்துறையினர் பரிசோதனை செய்து பிறகு சிலையை கரைக்க செல்ல அனுமதித்தினர்.
இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கும் பொதுமக்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சிலைகளை கொண்டு வந்து ஆற்றின் கரையோரத்தில் வைத்து விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு உற்சாகத்துடன் விநாயகர் சிலையை கரைத்து விட்டு சென்றனர்.

.jpeg)
Comments
Post a Comment