பாமக எம்.பி சந்தித்து மாற்றுக் கட்சியினர் இணைந்தனர்..!

 தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வருகைத் தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்களை சந்தித்து மாற்றுக் கட்சியினர் பாமகவில் இணைந்தனர். 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சியை சார்ந்த திராவிட முன்னேற்றக் கழக அயலக அணி மாவட்டத் தலைவர் பாரதி தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி அவர்களை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்தினார். இந்நிகழ்வின் போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பாமக மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆ.அன்பழகன், மாவட்ட துணை தலைவர் நந்திசிவம், ஒன்றிய செயலாளர் குமரன், ஒன்றிய தலைவர் ஜிம்பாலன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!