கல்லூரியில் அணுக்கரு மற்றும் படிக வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம்..!

 தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் அணுக்கரு மற்றும் படிக வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

தருமபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியல் துறை சார்பாக வாழ்வியல் பயன்பாட்டில் அணுக்கரு மற்றும் படிக வளர்ச்சி என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்களுக்கு கல்லூரி செயலாளர் அருட்தந்தை முனைவர் ராபர்ட் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் கே ஆனந்த், துணை முதல்வர்கள் அருட்தந்தை தாமஸ் சார்ஜ், அருட்தந்தை கிறிஸ்தவ அலெக்சாண்டர், பொருளாளர் அருட்தந்தை அமலவானன் ஆகிய முன்னிலை வகித்தனர். 

இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜி.ஐயப்பன், சிலி நாட்டின் சண்டிகோ நகரில் இயங்கி வரும் அடல்போ இபான்ஸ் பல்கலைக்கழக பட்ட ஆய்வாளர் முனைவர் சிவராஜ் துரைராஜ் மற்றும் தருமபுரி பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மைய இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் எம்.பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டு நிஜ வாழ்வில் அணுக்கரு இயக்கம் படிக வளர்ச்சியின் தத்துவ வார்த்தை அம்சங்கள் நானோ படிகங்கள் சூரிய உப்புநீக்க நுட்பங்கள் ஆகிய நிஜ வாழ்வில் பயன்படும் விதம் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி  ஏற்பாடுகளை கணிதத்துறை தலைவர் பேராசிரியர் ஜெயசங்கர் மற்றும் இயற்பியல் துறை தலைவர் ராம்குமார் ஆகியோர் தலைமையில் துறை பேராசிரியர்கள் சிறப்பாக  செய்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!