கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் மாபெரும் கருத்தரங்கம்..!
கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் மாபெரும் கருத்தரங்கம்..!
தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் மாபெரும் கருத்தரங்கம் தருமபுரி அதியமான் கோட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பாக தமிழ்நாட்டில் 12,525 கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் பனிப்பதிவேடு உள்ள 40 ஆண்டு காலம் பணிபுரிந்த டேங்க் ஆபரேட்டர்கள், கிராம ஊராட்சியில் ரூபாய் 250 ஊழியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் டேங்க் ஆபரேட்டர்களுக்கு பணி வரன் முறை வேண்டும், 10 ஆண்டு பணிமுடித்த தூய்மை பணியாளர்களுக்கு காலை முறை ஊதியம் வழங்க வேண்டும், 3 ஆண்டு பணி முடிந்த தூய்மை பணியாள ர்களுக்கு சிறப்பு காலமுறை மற்றும் ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் 10,000 வழங்க வேண்டும், மாபெரும் கருத்தரகம் தருமபுரி அதியமான் கோட்டை சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கிருஷ்ணன், தமிழ்நாடு குடிமக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் பத்திரிகையாளர் எழுத்தாளர் மகேந்திரன், மாநில பொருளாளர் செய்தி தொடர்பாளர் சங்கர், மாநில பொதுச் செயலாளர் விஜயபாலன், மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, மாநில தலைமை நிலை செயலாளர் பொன்னையன், மாநில இணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்வில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இறதியாக மணி நன்றியுரை வழங்கினார்.

Comments
Post a Comment