பஞ்சப்பள்ளி அருகே சூடனூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடட்டம்..!

 சூடனூர் கிராமத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர் நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடட்டம்..!

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடனூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் நூதன ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா ஊர்க்கவுண்டர் முருகன் தலைமையில் வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. இந்த விழா நேற்று 15-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. இன்று அதிகாலை  கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை  கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து  திருக்குட நன்னீராட்டு  தீபாரதனை காட்டினார். பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து  ஸ்ரீ சக்தி விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து பின்பு பூக்களால் அலங்கரித்து  மகா தீபாரதனை காட்டப்பட்டது. பின்னர் ஸ்ரீ சக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  சூடனூர் ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக  செய்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!