ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம்..!
ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் சுவாமிக்கு தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம்..!
தருமபுரி அடுத்து பழைய தருமபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பட்டாளம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழாவையொட்டி இன்று சாமிக்கு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள், வான வேடிக்கை, குதிரை ஆட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கேரளா மேளம், காளை மாடு, பசுமாடு, ஒட்டகம், சாமி உருவ பொம்மைகள் ஆகியவையுடன் பால்குடம் ,முளைப்பாரி சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம், முளைப்பாரி எடுத்துச் சென்றனர். இவ்விழாவினை கோவில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.


Comments
Post a Comment