பாஜகவினர் காமராஜர் பிறந்த நாளை இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்..!

 பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு பாஜக சார்பில்  முன்னாள் முதல்வர்  கர்மவீரர் காமராஜர்  123 -வது பிறந்தநாள் விழா  கொண்டாட்டம்..!



தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு பாஜக சார்பில்  முன்னாள் முதல்வர்  கர்மவீரர் காமராஜர்  123 -வது பிறந்தநாள் விழா  மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில்  நடைப்பெற்றது. நகர தலைவர் கணேசன், நகர பொருளாளர் முனியப்பன், பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் சின்னவன், நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர செயலாளர்கள்  நந்தகிரி, ராஜாராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு உள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா மாலை அணிவித்து, மலர்தூவி  மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து பாஜகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து பொது மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் அழகுபெருமாள், சண்முகம், மாதேஷ், ராமர்,சரவணன் மற்றும் நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!