தவெக மாவட்ட செயலாளர் தாபா சிவாக்கு பிரமாண்டமான வரவேற்பு..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தருமபுரி மாவட்ட செயலாளராக தாபா சிவா பொறுப்பேற்று தனது சொந்த ஊர் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார் அப்பொழுது கட்சி தொண்டர்கள் தொப்பூர் சுங்க சாவடி பகுதியில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மலர்கள் தூவி, பட்டாசுகள் வெடித்து பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து தருமபுரி நகரப் பகுதியில் உள்ள இலக்கியம்பட்டி ஸ்ரீ சாலை மாரியம்மன் கோவிலில் தாபா சிவா பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் சாலை மார்க்கமாக கட்சி அலுவலகத்திற்கு சென்றபோது மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு காத்திருந்த கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மாவட்ட கழக செயலாளரை பட்டாசுகள் வெடித்து, ஆரத்தி எடுத்து மேளதாளங்களுடன் மலர்களைத் தூவி பிரம்மாண்டமான முறையில் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். இதில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் வீரமணி, பொருள...