மதத்தை இழிவுபடுத்தி பேசிய திமுக மத்திய ஒன்றிய செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

 மதத்தை இழிவுபடுத்தி பேசிய திமுக மத்திய ஒன்றிய செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மதத்தை இழிவுபடுத்தி பேசிய தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனை கண்டித்து தலித் விடுதலை கட்சி மற்றும் இந்திய மூல நிவாசி காவல் படையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மூல நிவாசி காவல் படையின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன், தலித் விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் நாகேந்திரன் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில்  திமுக ஒன்றிய செயலாளர் கிருஷ்ணனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், கட்சி விட்டு நீக்கு என கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுரேஷ், பிரசாந்த், சந்தோஷ், தீனா, நாகராஜ், தமிழ்ச்செல்வன், சரசுராம்ரவி, முனுசாமி, அம்பேத்கர், தலித் விடுதலை கட்சி மற்றும் இந்திய மூல நிவாசி காவல் படை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!