ஜல்லிக்கட்டு போட்டி கட்சி சார்பாக நடத்த தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
ஜல்லிக்கட்டு போட்டி கட்சி சார்பாக நடத்த தடை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு..!
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியினை கட்சி சார்பாக நடத்தக் கூடாது எனவும் ஜல்லிக்கட்டு போட்டியினை அரசே நடத்த வேண்டும் என்று பொது மக்களின் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது;
தருமபுரி மாவட்டத்தில் வந்து பாத்தீங்கன்னாக்க தொடர்ந்து ஒரு நான்கு ஐந்து ஆண்டுகாலமாக வந்து ஜல்லிக்கட்டு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது, இது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசே வந்து ஜல்லிக்கட்டு சிறந்த முறையில் சிறப்பான முறையில் நடத்தியது. அதை தொடர்ந்து வந்து இரண்டு ஆண்டுகளுக்கு காலமாக அதை வந்து நடத்த முன்வரவில்லை அதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது ஒரு தனிப்பட்ட கட்சியை சார்பாக ஒரு தனிப்பட்ட அரசியல் நோக்கோடும் பணம் வசூலிக்கும் எண்ணத்தோடும் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு தனிப்பட்ட ஒரு கட்சியினுடைய பிரமுகர்கள் நடத்துவதை தடை செய்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய நேரடி பார்வையில் தருமபுரி மாவட்டத்திற்கு இந்த ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய பண வசதி அதாவது வந்து நிதி உதவி வழங்கி இந்த ஜல்லிக்கட்டு வந்து சிறப்பாக நடைபெற்ற எங்களுக்கு வந்து வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு இந்த அரசியல் சார்பா நடத்தக்கூடிய இந்த ஜல்லிக்கட்டை வந்து தடை செய்ய வேண்டும் என்றும் அதேபோல வந்து இது முற்றிலும் வந்து மணி மோடி வோடா செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று பொதுமக்களுடைய மிகப்பெரிய வந்து கடந்த ஆண்டு சலசலப்பு ஏற்பட்டது அந்த சலசலப்பு அடிப்படையாக இந்த ஆண்டு வந்து பொது மக்களிடம் பெருசா வசூலிக்காமல் வந்து அரசே கவனத்தில் எடுத்துக் கொண்டு சிறப்பாக நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்து இருந்தோம் மாவட்ட ஆட்சியர் வந்து அதை பரிசளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

Comments
Post a Comment