பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!
பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளம் பட்டி சாலையில் உள்ள மந்தைவெளி மைதானத்தில் பல ஆண்டுகளாக அங்கன்வாடி பள்ளி இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் பழுது அடைந்ததால் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது அங்கன்வாடி மையத்தின் பிரிந்த நிலையில் உள்ள கட்டிடம் அருகே பாலக்கோடு பேரூராட்சி மூலம் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க தற்போது முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கன்வாடி மைய கட்டிடம் புதிதாக கட்ட முடியாத நிலையில் அதனை ஆக்கிரமித்தும் கட்டுகிறார்கள். ஆகையால் உடனே இந்த பணிகளை நிறுத்தி பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து அங்கன்வாடி மற்றும் சுற்றிலும் பூங்கா அமைத்து அங்கன்வாடி பள்ளி அங்கேயே நடைபெற நடவடிக்கை எடுப்பதுடன் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசின் நல திட்ட பிரிவின் மாவட்ட துணை தலைவர் சிவா, நகர பொருளாளர் முனியப்பன், பொருளாதார பிரிவு நகர தலைவர் சேகர், நகர பொறுப்பாளர் பச்சையப்பன், அழகு பெருமாள் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Comments
Post a Comment