Posts

Showing posts from September, 2025

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்..!

 தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்..! தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில்நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர் வரவேற்றார். தொகுதி பார்வையாளர் அரியப்பன், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால், அன்பழகன், கண்ணபெருமாள், பஞ்சப்பள்ளி அன்பழகன், முனியப்பன், ஆனந்தன்  உட்பட பலர்  முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்து வாக்காளர் பட்டியல் சிறப்பு SiR திருத்தம் தொடர்பான ஆலோசனை வழங்கி பேசினார்.  இதைதொடர்ந்து மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசும்போது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதியும் வெற்றி பெற செய்ய வேண்டும், இதில் குறிப்பாக பாலக்கோடு தொகுதி தொடர்ந்து 25 ஆண்டுகளாக அதிமுக  தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அதை முறியடித்து பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், அதற்கு கட்சி ...

நூலஅள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..!

Image
 நூலஅள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..! தருமபுரி மாவட்டம் தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட நூலஅள்ளி மற்றும் நல்லசேன அள்ளி ஊராட்சிகளுக்கு "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நூலஅள்ளி மண்டுவில் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா சிட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை ஆகிய சேவைகளை வேண்டி பொதுமக்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் அளித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவ முகாமில் பொதுமக்கள் பிபி, சக்கரை நோய் இதர மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் மாதையன், சக்திவேல், ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரியில் அதிமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..!

Image
 தருமபுரியில் அதிமுக, அமமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..! தருமபுரி நகர அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 117- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியார் சிலை அருகில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, விவசாய அணி தலைவர் அன்பழகன், நகரச் செயலாளர் பூக்கடை ரவி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட அமமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் டி. கே. ராஜேந்திரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் ஆர். பாலு, கழக ஆட்சி மன்ற தலைவர் ஆர்.ஆர்.முருகன், நகரச் செயலாளர் என். பார்த்திபன், முத்துசாமி, சங்கீதா, பழனிசாமி, கணேசன், காளி, வேலாயுதம், ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.