நூலஅள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..!
நூலஅள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..!
தருமபுரி மாவட்டம் தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட நூலஅள்ளி மற்றும் நல்லசேன அள்ளி ஊராட்சிகளுக்கு "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நூலஅள்ளி மண்டுவில் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா சிட்டா பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை ஆகிய சேவைகளை வேண்டி பொதுமக்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் அளித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவ முகாமில் பொதுமக்கள் பிபி, சக்கரை நோய் இதர மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஒன்றிய செயலாளர் மாதையன், சக்திவேல், ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment