நிருபர்களிடம் வாக்குவாதம் செய்து ஒருமையில் பேசிய வாக்குசாவடி அலுவலர்..!
நிருபர்களிடம் வாக்குவாதம் செய்து ஒருமையில் பேசிய வாக்குசாவடி அலுவலர்..!
தர்மபுரி நகராட்சி 29 எ வது வார்டு பகுதியில் தர்மபுரி எம்பி மற்றும் மாஜி எம்பி வாக்களிப்பதை செய்தி சேகரிக்க காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் 29 எ வார்டு ஆண்கள் வாக்குப் பதிவு செய்யும் வாக்குச்சாவடியில் நிருபர்கள் செய்தி சேகரிக்க சென்றனர். அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களை பணியில் இருந்த வாக்குச்சாவடி அலுவலர் ஒருமையில் பேசி கூச்சலிட்டார். செய்தியாளர்கள் அடையாள அட்டையை காண்பித்தும் வெளியே செல்லுங்கள் என ஒருமையில் பேசினார் இதனையடுத்து சக செய்தியாளர்கள் வாக்குச்சாவடி அலுவலர் அடாவடித்தனத்தில் ஈடுபடுவது தவறு என்றும் ஏற்கனவே இரண்டு தனியார் தொலைக்காட்சி நிருபர்களிடம் காலை 7 மணி முதலே இவர் ஒருமையில் பேசி அடாவடி செய்துள்ளார் தொடர்ந்து செய்தியாளர்கள் செய்தி எடுக்க சென்ற போதும் அவர் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியதுயடுத்து அங்கு வந்த போலீசார் செய்தியாளர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதே வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர்கள் எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்றினர் இதை எடுத்துக் கூறியும் அலுவலர்கள் அதை கண்டுகொள்ளவில்லை இதனையடுத்து காவல்துறையினர் அரசு வழங்கிய அடையாள அட்டை இல்லாத வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி விட்டு வெளியேற வேண்டுமென எச்சரித்தனர். அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு நிருபர்களிடம் அடாவடியில் ஈடுபட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.
படவிளக்கம்
தர்மபுரி நகராட்சி 29 எ ஆண்கள் வார்டில் நிருபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாக்குசாவடி அலுவலர்.
அருமையான தகவல்
ReplyDelete