தருமபுரியில் மூன்றாம் அலை கொரோனா மற்றும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சரம்..!
தருமபுரியில் மூன்றாம் அலை கொரோனா மற்றும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சரம்
தருமபுரி மாவட்டத்தில் அரசு உயர் நிலைப் பள்ளி, ஆலமரத்துப்பட்டி, டீஸ்டால், சிட்லகாரம்பட்டி பஸ் நிறுத்தம், பாப்பாரப்பட்டி ரோடு, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி எதிரில், பென்னாகரம் ரோடு, பாப்பாரப்பட்டி ஆகிய பல்வேறு இடங்களில் இணை இயக்குனர் மேற்கு மண்டலம் அவர்களது உத்தரவின்படியும், தருமபுரி மாவட்ட அலுவலர் அவர்களது அறிவுரையின்படியும்,தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில் கொரோனா பரவல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். தீயை அணைக்கும் முறைகள்,தீயின் வகைகள், முதலுதவி, தீ அணைப்பான் பயன் முறைகள், நீரில் மூழ்கியவரை காப்பாற்றும் முறை,இடி, மின்னல் சமயங்களில் எப்படி காப்பாற்றிக்கொள்வது, கேஸ் சிலிண்டர் தீ விபத்து, மின் தீ விபத்துகள், மற்றும் எவ்வாறு தீயை தடுப்பது மற்றும் அணைப்பது என்று பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் அவர் பல்வேறு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் செய்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தார். மற்றும் மூன்றாம் அலை கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.
Comments
Post a Comment