கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது; தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கார்த்தன அள்ளி கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கரக செல்லியம்மன் கோவில் நிலம் 33 ஏக்கர் 42 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் இந்த கோவில் அறங்காவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலம் ஏலம் விட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலத்தை பொது ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஏலத்தை சேலம் இணை ஆணையர் பொது ஏலம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த உத்தரவை செயல்படுத்தாமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஏலம் விடாமல் இந்த கோவில் அறங்காவலர் குழுவினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை மீறி இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த நிலத்தை ஏலம் விடாததால் கரக செல்லியம்மன் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி கோவில் நிலத்தை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்...
பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..! தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட வெள்ளம் பட்டி சாலையில் உள்ள மந்தைவெளி மைதானத்தில் பல ஆண்டுகளாக அங்கன்வாடி பள்ளி இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் பழுது அடைந்ததால் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது அங்கன்வாடி மையத்தின் பிரிந்த நிலையில் உள்ள கட்டிடம் அருகே பாலக்கோடு பேரூராட்சி மூலம் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க தற்போது முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கன்வாடி மைய கட்டிடம் புதிதாக கட்ட முடியாத நிலையில் அதனை ஆக்கிரமித்தும் கட்டுகிறார்கள். ஆகையால் உடனே இந்த பணிகளை நிறுத்தி பழுதடைந்த கட்டிடத்தை சீரமைத்து அங்கன்வாடி மற்றும் சுற்றிலும் பூங்கா அமைத்து அங்கன்வாடி பள்ளி அங்கேயே நடைபெற நடவடிக்கை எடுப்பதுடன் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் என பாலக்கோடு பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசின் நல திட்ட பிரிவின் மாவட்ட துணை தலைவர் சிவா, நகர பொருளாளர் முனியப்பன், பொருளாதார பிரிவு நகர தலைவர் சேகர், நகர பொறுப்பாளர் ...
பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமை தாங்கினார். இதில் ஷோரூம் உரிமையாளர் ஜெகதீஷ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தொழிலதிபர்கள் கேசவராஜ், விமல்ராஜ், சக்திதரன், மங்களகணபதி முருகேசன், ராஜாமணிசரவணன், நகை கடைசங்க தலைவர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி புதிய மொபைல் ஷோரூமை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து வணிகர் சங்க தலைவர் முத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், அன்புமணி, தேமுதிக மாவட்ட செயலாளர் விஜய்சங்கர், பாஜக நகர் மண்டல் தலைவர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேளாவள்ளி சேகர், கணபதி, சின்னவன், தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேசன், தொழிலதிபர்கள் தண்டாயுதபாணி, சிவாஜி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ...
Comments
Post a Comment