ஆவடி மாநகராட்சி பதவி ஏற்பு விழாவில் மாநகராட்சி அலுவலகம் திருமணமண்டபம் போல் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது
ஆவடி மாநகராட்சி பதவி ஏற்பு விழாவில் மாநகராட்சி அலுவலகம் திருமணமண்டபம் போல் அலங்கரிக்கப்பட்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் களுக்கு வரவேற்பு அளித்தனர் மாமன்ற உறுப்பினர்கள் நலத்திட்ட பணிகளை நிறைவேற்றினால் நீங்களும் அமைச்சர் மற்றும் நாடாளமன்ற உறுப்பினர் ஆகலாம் என அமைச்சர் சா .மு நாசர் வார்டு உறுப்பினர்களை வாழ்த்தி ஆலோசனை வழங்கினார்.
சென்னை புறநகர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது தற்போது பதவி ஏற்பு விழா தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் உள்ள ஒரே மாநகராட்சியாக உள்ள ஆவடி மாநகராட்சியில் 48 வார்டு உறுப்பினர் பதவி ஏற்பு விழா மாமன்ற கூட்டரங்கில் தமிழ் தாய் வாழ்த்து பாடி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பால் துறை அமைச்சர் சா. மு.நாசர் ,மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கலந்து கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆவடி மாநகராட்சி ஆணையர் தேர்தல் பணி அதிகாரி சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனர் . மாநகராட்சி பதவி ஏற்பு விழாவில் திமுக கூட்டணி 46 பேர் பதவியேற்றுக்கொண்டனர் ,இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் 2பேர் மட்டுமே பதவி ஏற்றுக் கொண்டனர்.
ஆவடி மாநகராட்சி 4வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் அவர்களின் மகன் ஆசிம் ராஜா பதவியேற்றவுடன் அமைச்சர் நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோரிடம் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். இதனைத் அடுத்து 48 வார்டு உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் ஆவடி மாநகராட்சியின் புதிய மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் பின்னர் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்ற முடித்தவுடன் தேசிய கீதம் பாடி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் ஆவடி மாநகராட்சி பொறியாளர் வைத்திலிங்கம் துணைப் பொறியாளர் சத்தியசீலன் ஆவடி மாநகராட்சி சுகாதார செயல் அலுவலர் அப்துல் ஜாபர் மற்றும் அரசு அதிகாரிகளும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment