அதிவேகத்தில் சென்ற கனிமவள லாரி சென்டர் மீடியனில் இடித்து விபத்து
அதிவேகத்தில் சென்ற கனிமவள லாரி சென்டர் மீடியனில் இடித்து விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு பெருமளவு கனிமவள கடத்தல் நடந்து வருகிறது. கனரக வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் அதிக பாரம் ஏற்றி கனிம வளங்களை கடத்திச் செல்கிறது. தடுக்க வேண்டிய அதிகாரிகள் லஞ்சம் பெற்று அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளை வழியனுப்பி வைத்து வருகின்றனர். பகல் மற்றும் இரவு வேளைகளில் மின்னல் வேகத்தில் அதிக பாரம் ஏற்றி கனிமவள லாரிகள் செல்வதால் பெருமளவு விபத்துக்கள் அதிகரித்து உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தக்கலை காவல் சரகத்திற்கு உட்பட்ட வெள்ளி கோடு, இரட்டை விளை ஆபத்தான வளைவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் அதிவேகமாக சென்ற கனிமவள கடத்தல் லாரி இடித்து சென்டர் மீடியனை சேதப்படுத்தி நடுரோட்டில் நின்றது. ஆனால் அந்த இடத்திற்கு போலீசார் வரவோ தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுவே வாகனம் நிற்பதையும் கண்டு கொள்ளவும் இல்லை. இதுவே வேறு ஏதாவது வாகனங்களால் இருந்தால் போலீசார் உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்.
ஆனால் மாதாமாதம் ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் கனிமவள மாபியா கும்பல்கள் தரப்பில் சில லட்சங்கள் வரை மாத மாமூல் பெறுவதால் கனிமவள லாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் அதை நிரூபிக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஏற்பட்ட மேற்படி விபத்து தொடர்பாக பல மணி நேரங்களை கடந்தோம் போக்குவரத்துக்கு இடையூறாக ஆபத்தான வளைவில் சாலையின் நடுவே கனரக லாரி விபத்தை ஏற்படுத்தி நின்றுகொண்டு இருந்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சாலையில் சென்டர் மீடியனில் சேதத்தை ஏற்படுத்திய கனிமவள கடத்தல் லாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே குமரி மாவட்ட காவல்துறை கனிம வள கடத்தல் லாரிகள் மீது ஒருதலைப்பட்சமாக கனிம வள கடத்தல் கும்பலுக்கு சாதகமாக செயல்படுவதை விட்டுவிட்டு நேர்மையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குமரி மாவட்டத்தில் தற்போது கனிமவள கடத்தல் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க முடியும் என்பதோடு அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள கடத்தல் லாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிக பாரம் ஏற்றி செல்லும் கனிம வள கடத்தல் லாரிகளை அனுமதிக்கின்றனர். என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுபட முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கூற்றாக உள்ளது.
Comments
Post a Comment