தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

 தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.


தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் கே எஸ் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே வி  சின்னசாமி, மாநிலத் துணைத் தலைவர் என்எஸ் செந்தில், தருமபுரி மாவட்ட செயலாளர் கே சக்திவேல், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் பி ஸ்ரீராம் ரெட்டி, மாவட்ட செயலாளர் சென்னை நாயுடு, டிராக்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் எம்எஸ் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பேராசிரியர் ஏ எஸ் சின்னசாமி அவர்கள்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த கூட்டத்தின் மூலமாக தமிழக அரசுக்கு சில கோரிக்கைகள் வைக்கிறோம். 

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூட்டுறவு பயிர்கடன் அதேபோல நகை கடன் தள்ளுபடி அந்த காலக்கெடுவை நீட்டித்து அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி கிடைக்கக் கூடிய வகையிலே தீர்மானிக்க வேண்டும் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பெயரில் நெல் விளைச்சல் சாதனை புரிந்த விவசாயிகளுக்கு விருது வழங்கும் என்று அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழக அரசுக்கு தமிழக விவசாய சங்கத்தின் சார்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இன்றைக்கு இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கக்கூடிய தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன் பெற கூடிய எண்ணெ கோல் புதூர், தும்பல அள்ளி கால்வாய் திட்டம், அளியாளம் தூள் செட்டி ஏரி கால்வாய்த்திட்டம், புலிகரை ஏரி கால்வாய் திட்டம் கிழக்கு மற்றும் வலது இடது புற கால்வாய் திட்டம் காவிரி உபரி நீரை ஒகேனக்கல்லில் இருந்து மின்மோட்டார் மூலம் தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு விரோதமாக தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பறிக்கும் வகையில் கர்நாடக அரசும், கர்நாடக எதிர்க் கட்சியும் இணைந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் விடக்கூடாது என்று நோக்கத்தில் காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும். மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது எனவும், கர்நாடக அரசின் தமிழக விரோத முயற்சியை கைவிட வேண்டும் எனவும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு கேடுவிளைவிக்கும் கர்நாடக அரசை கண்டித்து

 தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் (24.03.2022) தருமபுரி தலைமை தபால் நிலையம் அருகே இருந்து ஒகேனக்கல் வரை வாகன பேரணி புறப்பட்டு ஒகேனக்கலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக முடிவெடுத்திருக்கிறோம். இதிலே மற்ற மாநில அளவிலே இருக்கக்கூடிய எல்லா மாவட்டங்களில் இருந்தும் உரிய பிரதியில் வந்து கலந்து கொள்வார்கள் ஆகவே இது ஒரு மாநில அளவிலான போராட்டமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!