அம்பத்தூர் அருகே 200 அடி பைபாஸ் சாலையில் வழிப்பறி 82 லட்சம் கொள்ளை. மூன்று பேர் கொண்ட கும்பல் துனீகரம்

அம்பத்தூர் அருகே 200 அடி பைபாஸ் சாலையில் வழிப்பறி 82 லட்சம் கொள்ளை. மூன்று பேர் கொண்ட கும்பல் துனீகரம்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை  200 அடி பைபாஸ் சாலைமேம் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்த விஜயகுமார் வ/43 எடுத்துச் சென்ற  82 லட்ச ரூபாய் பணத்தை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் விஜயகுமார் என்பவரை  வழி மறித்து  கை,கால்,தலை உள்ளிட்ட பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை  அருகே 200அடி பைபாஸ் சாலை மேம்பாலத்தில் ஹோண்டா இருசக்கர வாகனத்தில் வானகரத்திலிருந்து மாதவரம் பால் பண்னையில் உள்ள சுரேன் இண்டஸ்ட்ரீஸ் என்னும் நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை விஜயகுமார் எனும் ஊழியர் இரு  சக்கர வாகனத்தில் எடுத்து சென்ற போது மதுரவாயல் பைபாஸ் சாலையில் மதியம் ஒரு 1 அளவில் 


மதுரவாயிலிருந்து பின் தொடர்ந்து வந்த கும்பல் விஜயகுமாரை அம்பத்தூர் தொழிற் பேட்டை அருகே மேம்பாலத்தின் மீது வைத்து சரமாரியாக தாக்கி வெட்டி 82 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளனர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை பொதுமக்கள் பார்த்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ராமசாமி, கொரட்டூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்தில்  பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!