தமிழ்நாடு , கம்ம நாயுடு வடுகர் இனத்தவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும்...!
தமிழ்நாடு , கம்ம நாயுடு வடுகர் இனத்தவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு கம்ம குல குடும்ப விழாவில் மாநிலத் தலைவர் ரவீந்திரன் கொங்கு நாயுடு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருநின்றவூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கம்மா நாயுடு கமகுல யுகாதி தின குடும்ப விழா ஏ கே ரோஸ் நாயுடு அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டில் வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கம்ம நாயுடு மாநிலத் தலைவர் ரவீந்திரன் கொங்கு நாயுடு மற்றும் மாநில செயல் தலைவர் மோகன் நாயுடு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் பேசுகையில் கம்ம நாயுடு சங்கம் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் கமகுல குடும்ப விழா யுகாதி தினத்தை முன்னிட்டு கம்ப நாயுடு, குடும்ப விழா நடைபெறுவதாகவும் சென்னையில் மட்டும் 50 மேற்பட்ட இடங்களில் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார் பின்னர் தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு கம்ம நாயுடு இனத்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்றும் வடுகர் இனத்தை மிக மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு 500க்கும் மேற்பட்ட கம்ம நாயுடு குடும்ப விழாவில் கலந்து கொண்டு அவர்களது பிள்ளைகளை விழா மேடையில் தெலுங்கு பட பாடலுக்கு நடனமாடி விழாவிற்கு வந்தவர்களை மகிழ்வித்தனர்.


Comments
Post a Comment