சென்னையிலிருந்து கடையம் நோக்கி மகாகவிபாரதி அவர்களின் துணைவியாருடன் , இருப்பதுபோல் திரு உருவ சிலை ரதயாத்திரையை..!
சென்னையிலிருந்து கடையம் நோக்கி மகாகவிபாரதி அவர்களின் துணைவியாருடன் , இருப்பதுபோல் திரு உருவ சிலை ரதயாத்திரையை பாரதியாரின் தங்கையின் கொள்ளுபேத்தி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கசுவா பகுதியில் சேவாலயா தொண்டு நிறுவனத்திலிருந்து பாரதியாரின் தங்கையின் கொள்ளுப் பேத்தி கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல் பயணமாக செங்கல்பட்டு வழியாக பாண்டிச்சேரி விழுப்புரம் உளுந்தூர்பேட்டை , எட்டயபுரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் மக்களின் வாழ்க்கையோடு வாழ்ந்து தொடர்புடைய அனைத்து இடங்களிலும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களில்அவரின் மனைவி செல்லம்மா பிறந்த ஊரான கடையத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதி துணைவியாருடன் 2 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார், ஆனால் அதற்கான தடயங்கள் எதுவும் இப்பொழுது இல்லை என்பதால், இதனை போக்கும் வகையில் கடையத்தில் மகாகவி நினைவை நிலைக்கச் செய்யவேண்டும் என்ற திட்டத்தை ஆவடி அடுத்த பக்கம் கசுவா பகுதிகள் அமைந்துள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் திரு முரளிதரன் அவர்களால் தொடங்கியது.அதனை அடுத்து முதல் கட்டமாக ஜூன் மாதம் 27 ஆம் தேதி மகாகவி பாரதியாரின் 125வது திருமண நாளில் கடையத்தில் செல்லம்மாள் பாரதி உருவச்சிலையை செல்லம்மாவின் தோளில் கை வைத்த போல் பாரதியின் 7 அடி உயர சிலை நிறுவ வேண்டும் என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக கடையம் செல்ல காத்திருந்த நிலையில் இன்று சிலை செதுக்கிய சிற்பி சுரேந்திரநாத்தின் இல்லத்திலிருந்து பாரதி செல்லம்மாவின் சிலை அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வைக்கப்பட்டு சேவாலயா சேவை மையத்துக்குச் கொண்டுவரப்பட்டது
பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரத யாத்திரையை மகாகவி பாரதியின் தங்கையின் கொள்ளு பேத்தி கவிஞர் உமாபாரதி, புவனேஸ்வரி சுப்பிரமணியம் ஹரிஹரன் சாம்பமூர்த்தி மற்றும் எள்ளு பேத்தி சாதனா பிரசன்னா பிரபல ஓவியர் ஜெயராஜ், மர சிற்பி அப்பர் லக்ஷ்மணன் மற்றும் சேவாலயா தொண்டு நிறுவனர் முரளிதரன் ஆகியோர் கொடியசைத்து ரத யாத்திரையை துவக்கி வைத்தனர்.
இந்த யாத்திரை ஆனது கசுவா சேவாலயத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஜூன் 1ம் தேதி கடையம் சென்றடையும்.
முன்னதாக மாணவ மாணவிகளின் நடனம் மகாகவி பாரதி கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியாரின் கொள்ளுப்பேத்தி உமா பாரதி பரிசுகளை வழங்கினார்.
செய்தியாளர் சந்திப்பில்
தமிழக அரசுக்கு வேண்டுதலாக கேட்டுக்கொண்டுள்ளனர்.
மகாகவி பாரதியாரின் தங்கையின் கொள்ளுப் பேத்தி உமா பாரதி அவர்கள், தெரிவிக்கையில் அனைத்து இடங்களிலும் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இந்த மாதம் 14ஆம் தேதி மற்றும் ஆளுநர் மாளிகையிலும் மகாகவி பாரதியார் சிலை நிறுவி இருக்கிறார்கள் என்றும் எங்களுக்கு பாரதியின் வம்ச வழியில் பிறந்தது நாங்கள் மகிழ்ச்சி கொள்வதாகவும் உலகத்திலே முதல்முறையாக பாரதியின் மனைவி செல்லம்மாள் பாரதி அவர்களையும் சேர்ந்து இருப்பது போல் சிலை நிறுவியது எங்களுக்கு மிக மகிழ்ச்சி தருவதாகவும் சேவாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் முரளிதரன் அவர்களுக்கு தான் மனம் தோன்றியது என தெரிவித்தார் மேலும் தமிழக அரசுக்கு மகாகவி பாரதி குடும்பத்தினர் வேண்டுதலாக கேட்டுக்கொள்வது என்னவென்றால் பாரதியின் தமிழ் உலகெல்லாம் பரவ வேண்டும் என்றும் பாரதியின் புகழ் எவ்வாறு பாடத்திட்டத்தில் மூலமாக சில பாடல் பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டு
இருக்கிறதோ அதுமட்டும் இல்லாமல் அவரது கட்டுரைகள் கதைகள் சிறுகதைகள் அவரது வசனம் கவிதைகள் அவரது அறிவியல் பார்வைகள் இவையெல்லாம் அடுத்த தலைமுறையினருக்கு போய் சேர வேண்டும் என்றும் இதற்கு தமிழக அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார் இதற்கு அரசாங்கத்திற்கு பாரதியின் வம்சவலி நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.






Comments
Post a Comment