அம்பத்தூர் அருகே நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் கோப்பைகளை மேயர் பிரியா ராஜன் வழங்கினார்
சென்னை அம்பத்தூர் அருகே நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் கோப்பைகளை மேயர் பிரியா ராஜன் வழங்கினார்.
சென்னை அம்பத்தூர் அடுத்த கருக்கு பகுதியில் இயங்கி வரும் ஏ க்யூப் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப் சாமூவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை மேயர் பிரியா ராஜன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மணடல குழு தலைவர் பிகே மூர்த்தி, கிழக்கு பகுதி செயலாளர் எம்.டிஆர். நாகராஜன், தலைமை குழு உறுப்பினர், ரமேஷ் என்கின்ற நீலகண்டன் மற்றும், விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.




Comments
Post a Comment