தீ தடுப்பு, முதலுதவி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..!
தீ தடுப்பு, முதலுதவி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..!
தருமபுரியில் அரசு உயர்நிலைப்பள்ளி பென்னாகரம் ரோடு பி.அக்ரகாரம், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கார்மென்ட்ஸ் பென்னாகரம் ரோடு இண்டூர், மகாலட்சுமி ப்ரூட்ஸ் பேருந்து நிலையம் இண்டூர் ஆகிய இடங்களில் இணை இயக்குனர் மேற்கு மண்டலம் அவர்களது உத்தரவின்படியும், தருமபுரி மாவட்ட அலுவலர் அவர்களது அறிவுரையின்படியும்,தீ தடுப்பு குழு நிலைய அலுவலர் கு.குணசேகரன் தலைமையில் கொரோனா பரவல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
தீயை அணைக்கும் முறைகள்,தீயின் வகைகள், முதலுதவி, தீ அணைப்பான் பயன் முறைகள், நீரில் மூழ்கியவரை காப்பாற்றும் முறை,இடி, மின்னல் சமயங்களில் எப்படி காப்பாற்றிக்கொள்வது, கேஸ் சிலிண்டர் தீ விபத்து, மின் தீ விபத்துகள், மற்றும் எவ்வாறு தீயை தடுப்பது மற்றும் அணைப்பது என்று அரசு பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் அவர் பல்வேறு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் செய்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தார். மற்றும் மூன்றாம் அலை கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.


Comments
Post a Comment