ஒகேனக்கல்லில் 4வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

கர்நாடகா அணைகளில் இருந்து 63ஆயிரத்து 882 கன அடி உபரி நீர் திறப்பால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45;ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை  கிருஷ்ணராஜ சாகர் அணை  நுகு அணை மூன்று அணைகளில் இருந்தும் மொத்தமாக 63ஆயிரத்து 882 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை நான்கு மணி அளவில் வினாடிக்கு 21,000  கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கூடுதலாக உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது.

இதனால் மெயின் அருவி ,ஐந்தருவி சினிபால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.மேலும் காவிரி ஆற்றில் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து இன்று நான்காவது நாளாக குளிக்கவும் பரிசில் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!