இந்திய மூல நிவாசி காவல் படையினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இந்திய மூல நிவாசி காவல் படையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் ஜோடிக்கு ஆதரவு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதி வெறி மற்றும் கூலிப்படை கும்பல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், சாதி ஆவண படுகொலையை தடுத்து தனி சட்டம் இயற்றிட வேண்டும், கள்ள சாராயம், கஞ்சா, சந்து கடை, மது வியாபாரம் ஆகியவற்றை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மண்டல செயலாளர் தீனா, மாவட்டத் தலைவர் பிரசாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குமார், மேற்கு மாவட்ட செயலாளர் திருமாவளவன், நாகேந்திரன், பழ முனுசாமி மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment