உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் பாராட்டு சான்றிதழ்..!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் நர்ஸிங் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் வழங்கி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில்

 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என இது போன்று பல்வேறு வாசகங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பதாகைகள் ஏந்தி கொண்டு விழிப்புணர்வு பேரணியாக சென்று இலக்கியம்பட்டியில் நிறைவடைந்தது. இதில் அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) வேடியப்பன், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட குடும்பநல துணை இயக்குநர் பாரதி, துணை இயக்குநர் பாலசுப்ரமணியம், தொழுநோய் துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் உமா, எய்ட்ஸ் மற்றும் கட்டுபாட்டு அலுவலகம் மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ஆறுமுகம், அரசுத்துறை அலுவலர்கள், தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!