எழுத்தறிவு எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சி..!
தருமபுரி மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்டத்தின் சார்பில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்க ஏதுவாக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது 2024-25 ஆம் கல்வி ஆண்டில் தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட குடியிருப்புகளில் முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 2100 பேர் கண்டறியப்பட்டு 101 தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தின் மூலம் (2024 ஜூலை.15) முதல் ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரம் என வரும் நவம்பர் 2024 மாதம் வரை மொத்தம் 200 மணி நேரம் அடிப்படை எழுத்தறிவு என்ன அறிவு மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் தன்னார்வலர்களைக் கொண்டு வழங்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து
தருமபுரி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மைய துவக்க விழா நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி வரவேற்புரை ஆற்றினார். வார்டு உறுப்பினர் இளங்கோ விழாவிற்கு முன்னிலை வைத்தார். மேலும் இவ்விழாவில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், தீர்த்த ராமன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன் வட்டார ஒருங்கிணைப்பாளர் மோகன், சிவக்குமார், தன்னார்வலர் மணிவண்ணன், பள்ளியின் ஆசிரியர்கள், கற்போர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment