அருங்காட்சியகத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு..!

 தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், வள்ளல் அதியமான் கோட்டத்தின் முன்புறத்தில் உள்ள இடத்தில் தொல்லியல் துறையின் மூலம் நடுகற்கள் அகழ்வைப்பகம் அமைப்பதற்கு அரசு ஆணை வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து, தருமபுரி நகரப்பகுதியில் உள்ள அருங்காட்சியகத்தை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை 2022-2023-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களிடையே தமிழ் தொல்லியல் மரபு குறித்து ஆர்வத்தை ஏற்படுத்திடவும், நமது மாநிலத்தில் கிடைத்துள்ள அரும்பொருட்களைப் பேணிப் பாதுகாக்கவும், அருங்காட்சியகங்களும், அகழ்வைப்பகங்களும் (on-site museums) மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், தருமபுரியில் அகழ்வைப்பகம் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் பொது மக்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் வந்து செல்லத்தக்க வகையில் நிலத்தினை ஒதுக்கீடு செய்து தருமாறு தொல்லியல் துறையின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் குழு உறுப்பினர்கள் ஆய்வின் போது, குழு மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதில், வள்ளல் அதியமான் கோட்டத்தின் முன்புறத்தில் உள்ள இடத்தில் நடுகற்கள் அகழ்வைப்பகம் அமைப்பது பொருத்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்ட வளாக முன்புறத்தில் உள்ள 50 சென்ட் இடத்தில் நடுகற்கள் அகழ்வைப்பகம் அமைப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தருமபுரி நகரப்பகுதியில் உள்ள அருங்காட்சியகத்தை மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, நடுகற்கள் அகழ்வைப்பகம் அமையவுள்ள இடத்தில் நமது மாநிலம் மற்றும் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அரும்பொருட்களை பேணி பாதுகாக்கும் வகையில் இரண்டு அடுக்குகளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, திட்ட அறிக்கை தயாரிக்க செயற்பொறியாளர் பாரம்பரிய (மரபு) கட்டிடக்கோட்டம் அவர்களும், தொல்லியல் துறையைச் சார்ந்த அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து அரசுக்கு திட்ட அறிக்கையை விரைவில் சமர்பிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!